கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 33)

சூனியனின் திட்டத்திற்கேற்ப, செம்மொழிப்பிரியா நிழலையும், அதுல்யா கோவிந்தசாமியையும் காதல் வசப்படுத்துவதென முடிவாகிறது. இதற்கிடையில், இரவு ராணி என்னும் மந்திர மலரைத் தேடி கோவிந்தசாமி நீல வனத்திற்கு வந்துவிட்டான். அந்த மந்திர மலரைக் கொண்டு சாகரிகாவை தன்வசமாக்க பார்க்கிறான் கோவிந்தசாமி. செம்மொழிப்பிரியாவும் நிழலைப் பார்க்கப் புறப்படுகிறாள்.செம்மொழிக்கு நிழலைக் கண்டுபிடிக்கச் சற்று கடினமாகத்தான் இருந்தது. பல்வேறு சமஸ்தானங்களை தாண்டி நிழலைத் தேடி செல்கிறாள். ஒரு சமஸ்தான நீல வனவாசிகள், சாப்பாட்டை பற்றி மட்டுமே பேசுகின்றனர். இது செம்மொழிக்கு பெரிதாகப் பிடிக்கவில்லை. … Continue reading கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 33)